காரைக்குடியில் வாயிற் கூட்டம்

சிவகங்கை: காரைக்குடி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன் சி.ஐ.டி.யு., ஓய்வு ஊழியர் நல அமைப்பு சார்பில் காத்திருப்பு கூட்டம் நடந்தது.

சி.ஐ.டி.யு., மண்டல பொது செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் உமாநாத், உள்ளாட்சி பிரிவு முருகானந்தம், கட்டுமான பிரிவு வாசுதேவன், ஓய்வு பெற்ற அமைப்பு சார்பில் ஜெகந்நாதன், சிவக்குமார், மாரிமுத்து, தெய்வீரபாண்டியன், சேதுராமன் நிறைவுரை ஆற்றினர்.

பழைய பென்ஷன் அமல்படுத்து, ஓய்வு பெற்றோருக்கு நிலுவையில் உள்ள 16 மாத பணபலன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

Advertisement