ரேஷன் அரிசி பறிமுதல்
காரைக்குடி : செட்டிநாட்டில் வேனில் கடத்தி வந்த ஒருடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். செட்டிநாடு பகுதியில் எஸ்.ஐ., அழகர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்தவழியாக வந்த வேனை சோதனை செய்தபோது, அதில் ஒரு டன் ரேஷன்அரிசி கடத்தி சென்றது தெரிந்தது. வாகனத்துடன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் திருப்புத்துார் வடகரை ஜெயப்பிரகாஷ் 50, யை கைது செய்து, குடிமை பொருள் குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement