மண்டபத்தில் ரயில்வே சாரணர் விழா

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் ரயில்வே சாரணர் தலைமை பண்பு பயிற்சி மதிப்பீடு குறித்த விழா நடந்தது.

தென்னக மற்றும் மேற்குவங்க ரயில்வே சாரணர் மற்றும் வழிகாட்டிகள் குழுவினரின் தலைமைப் பண்பு பயிற்சி பாடத்தின் மதிப்பீடு செயல்பாடு குறித்த விழா மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. இதில் சாரணர் பயிற்சி பெற்ற பாடத்தின்படி, அவசர காலத்தில் மக்களுக்கு மருத்துவ உதவி, மீட்பு பணி, மக்களுக்கான உதவிக்கர செயல்பாடுகள் குறித்து விளக்கமாக பேசினர். விழாவில் தென்னக ரயில்வே தலைமை மின்பொறியாளர் ஆணையர் விஜயகுமார் வரவேற்றார். மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

Advertisement