ஒடிசாவில் ரூ.60 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

15


புவனேஸ்வர்: ''காங்கிரஸ் மக்களைக் கொள்ளையடிக்க எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை'' என ஒடிசாவில் ரூ.60 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.

ஒடிசாவின் ஜார்சுகுடாவில் தொலைத்தொடர்பு, ரயில்வே, சுகாதாரம், உயர்க்கல்வி மற்றும் கிராமப்புற வீட்டுவசதி உள்ளிட்ட துறையில் ரூ.60 ஆயிரம் கோடிக்கும் மேல் மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அவர் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று தொடங்கப்பட்ட பெர்ஹாம்பூர்-உத்னா அம்ரித் பாரத் ரயில் குஜராத்தில் உள்ள ஒடியா மக்களுக்கு பயனளிக்கும்.



கலை மற்றும் கலாச்சாரத்தில் ஒடிசா மாநிலம் உலக புகழ் பெற்றது. இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் முயற்சிகளால் ஒடிசா வேகமாக முன்னேறி வருகிறது. இது வரை நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு 4 கோடிக்கு மேற்பட்ட வீடுகளை கட்டி கொடுத்துள்ளோம். பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற விரும்பும் நாடு, கப்பல் கட்டுமானத்தில் கவனம் செலுத்துகிறது. கப்பல் கட்டுமானம் தளத்தை ஊக்குவிக்க பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.



@quote@காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் மக்களைக் கொள்ளையடிப்பதால், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். காங்கிரஸ் மக்களைக் கொள்ளையடிக்க எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லைquote. ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு வரி விதித்தது. பாஜ அரசு ரூ.12 லட்சமாக வரம்பை உயர்த்தியது. பாஜ அரசு ஏழை மக்கள், தலித்துகள், பழங்குடியினருக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்துகிறது.


ஒடிசா பல தசாப்தங்களாக வறுமையைக் கண்டுள்ளது, ஆனால் இப்போது செழிப்புக்கான பாதையில் உள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு 4G தொலைத் தொடர்பு சேவைகளைத் தொடங்கிய உலகின் ஐந்து நாடுகளில் இந்தியாவும் இப்போது ஒன்று ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement