காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 38 பேர் பலி!

9

ஜெருசலேம்: மத்திய மற்றும் வடக்கு காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தினர் 9 பேர் உட்பட மொத்தம் 38 பேர் கொல்லப்பட்டனர்.



மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது.

இந்தப் போரால் காசா பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போரை நிறுத்தும்படி இஸ்ரேலை பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதைத் தவிர, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பல நாடுகள் அறிவித்து வருகின்றன.


இந்த சூழலில், அமெரிக்காவின் நியூயார்க்கில், ஐ.நா.,வின் 80வது பொது சபை கூட்டம் நடந்து வருகிறது. இதிலும் இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன. ஆனால் ஐநா பொதுச் சபை கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசுகையில், "ஹமாஸ் அமைப்பை ஒழித்து, காசாவில் நடக்கும் போரை முடித்து வைப்போம்" என, தெரிவித்தார்.


இந்நிலையில் இன்று மத்திய மற்றும் வடக்கு காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தினர் ஒன்பது பேர் உட்பட மொத்தம் 38 பேர் கொல்லப்பட்டனர். அதிகாலை நேரத்தில் மக்கள் வீட்டுக்குள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு எதிர்ப்பு உரையை நிகழ்த்திய ஒரு நாளுக்குப் பிறகு இந்த தாக்குதல் சம்பவம் நடந்து பரபரப்பை கிளப்பி உள்ளது.

Advertisement