பாட்னாவை வீழ்த்தியது பெங்கால்: புரோ கபடி லீக் போட்டியில்

ஜெய்ப்பூர்: புரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் அணி 48-42 என, பாட்னாவை வீழ்த்தியது.

இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 'ரைவல்ரி வீக்' என போட்டிகள் விறுவிறுப்பாக நடந்தன. லீக் போட்டியில் பாட்னா, பெங்கால் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் பெங்கால் அணி 26-25 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய பெங்கால் அணியினர், பாட்னா வீரர்களை 'ஆல்-அவுட்' செய்தனர்.
ஆட்டநேர முடிவில் பெங்கால் அணி 48-42 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பெங்கால் அணிக்கு கேப்டன் தேவங்க் (22 புள்ளி) கைகொடுத்தார். பாட்னா சார்பில் அயன் 15, மனிந்தர் சிங் 12 புள்ளி பெற்றனர்.


இதுவரை விளையாடிய 8 போட்டியில், 3 வெற்றி, 5 தோல்வி என, 6 புள்ளிகளுடன் பெங்கால் அணி 9வது இடத்துக்கு முன்னேறியது. பாட்னா அணி 4 புள்ளிகளுடன் (6 தோல்வி, 2 வெற்றி) 11வது இடத்தில் உள்ளது.

தமிழ் தலைவாஸ் வெற்றி: மற்றொரு லீக் போட்டியில் ஜெய்ப்பூர், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. இதில் தமிழ் தலைவாஸ் அணி 37-28 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் (13 புள்ளி) கைகொடுத்தார். ஜெய்ப்பூர் சார்பில் நிதின் குமார் 8 புள்ளி பெற்றார்.
இதுவரை விளையாடிய 9 போட்டியில், 4 வெற்றி, 5 தோல்வி என, 8 புள்ளிகளுடன் தமிழ் தலைவாஸ் அணி 8வது இடத்தில் உள்ளது.

Advertisement