ரூ.2 லட்சம் மோசடி புகாரில் உடற்கல்வி ஆசிரியர் கைது

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி, ஆணையாம்பட்டி எம்.ஜி.ஆர்., நகர் காலனியை சேர்ந்தவர் ராமர், 52; கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர். அதே பகுதியைச் சேர்ந்த முகந்தன் மனைவி சங்கீதா. இவரிடம் சத்துணவு சமையலர் உள்ளிட்ட ஏதேனும் அரசு வேலை வாங்கித்தருவதாக, 2 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். வேலை வாங்கி தராததால் கொடுத்த பணத்தை தரும்படி ராமரிடம் நேற்று முன்தினம் கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கெங்கவல்லி போலீசில், சங்கீதா புகாரளித்தார். இதன் அடிப்படையில் ராமர் மீது பெண் வன்கொடுமை, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்த போலீசார், அவரை நேற்று கைது செய்தனர். அதேபோல் ராமர் புகார்படி, சங்கீதா மீது தகாத வார்த்தை பேசிய பிரிவில் வழக்குப்
பதிவு செய்துள்ளனர்.

Advertisement