உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம்: கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன் என விஜய் அறிக்கை

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்தார். 'கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்' என சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
என் சொந்தங்களே
பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது. என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன். நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான்.
ரூ.20 லட்சம் நிவாரணம்
இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.
உதவிகள்
அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.













மேலும்
-
இபிஎஸ் பிரசாரத்துக்கு கொடுத்ததை விட விஜய்க்கு அதிக பாதுகாப்பு தரப்பட்டது; ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்
-
கரூர் சம்பவத்தில் யாரும் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது; திருமா
-
விஜய் வீட்டை முற்றுகையிட்ட திமுக மாணவர் அணி!
-
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதல் கரூர் சம்பவம் வரை... யார் இந்த அருணா ஜெகதீசன்?
-
கரூர் சம்பவத்தில் பலியான 40 பேரில் 33 பேரின் பெயர் விவரங்கள் வெளியீடு!
-
தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு