சாலையில் கிரஷர் துாசி கவலையில் வாகனஓட்டி

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் குவிந்து கிடக்கும் கிரஷர் துாசியால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கச்சைக்கட்டி ரோட்டில் 10க்கும் மேற்பட்ட கிரஷர்கள் செயல்படுகின்றன. இங்குள்ள கிரஷர்களில் இருந்து எம்.சாண்ட் துாசிகளை தினமும் லாரிகளில் ஏற்றி செல்கின்றனர். இவ்வாறு செல்லும்போது சிதறும் மண் துாசி கச்சைகட்டி பிரிவு- மதுரை நான்கு வழிச்சாலையில் 50.,மீ துாரத்திற்கு சாலையின் வெள்ளை கோடு வரை குவிந்துள்ளது.

டூவீலரில் செல்பவர்கள் குறிப்பாக இரவில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. கிரஷர் துாசியை கட்டுபடுத்தவும், மண் குவியலை அவ்வப்போது அகற்றவும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement