அக்., 2ல் 'தினமலர்' நடத்தும் 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி
கோவை : 'தினமலர்' நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் இணைந்து, விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கான 'அ'னா... 'ஆ'வன்னா... அரிச்சுவடி ஆரம்பம் என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சி, அக். 2ல், கோவை ராம்நகர், சத்தியமூர்த்தி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் காலை 7 முதல் 10 மணி வரை நடைபெற உள்ளது.
இரண்டரை வயது முதல் மூன்றரை வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்று, கல்வியைத் தொடங்கலாம். அனுமதி இலவசம். நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு செய்வது அவசியம்.
முன்பதிவு செய்யும் அனைத்து குழந்தைகளுக்கும், ஒரு ஸ்கூல் பேக் இலவசமாக வழங்கப்படும்.
பெற்றோர் தங்கள் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி மற்றும் மொபைல் போன் எண் ஆகிய விவரங்களை, 95666 97267 என்ற மொபைல் எண்ணுக்கு அனுப்பி, முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவுக்கான நேரம் காலை 10 முதல் மாலை 5 மணி வரை. நிகழ்ச்சியில், கோவை கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறு வனங்களின் நிர்வாக அறங்காவலர் மோகன்தாஸ், அறங்காவலர் மணிமேகலை, ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் கவிதாசன் ஆகியோர், அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியை, துவக்கி வைக்கின்றனர்.
மேலும்
-
நடக்கவே கூடாத துயரம்; யாரையும் குறை சொல்லி பயனில்லை; சீமான் பேட்டி
-
கரூரில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி
-
தண்ணீர் இல்லை, போலீஸ் பாதுகாப்பில்லை: கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பொதுமக்கள் பேட்டி
-
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு
-
கரூர் சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும்: தவெக வழக்கு
-
கரூர் துயரம்; அரசியல் கட்சியினர் அனைவருக்கும் பாடம்!