நடக்கவே கூடாத துயரம்; யாரையும் குறை சொல்லி பயனில்லை; சீமான் பேட்டி

10


கரூர்: கரூரில் நடக்கவே கூடாத துயரம் நடந்துவிட்டது. யாரையும் குறை சொல்லி பயனில்லை. இனி இதுபோல் நிகழாமல் தவிர்க்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.


கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து, சீமான் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறி இருப்பதாவது: தவெக தொண்டர்கள், பொறுப்பாளர்கள், தம்பி விஜய்க்கு என் ஆறுதல். இது துயரம் தான். மீண்டு வர வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற பேரிடர் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆறுதல் என்ற வார்த்தையே என்னிடம் உள்ளது. எல்லோரும் சேர்ந்து இந்த தவறை செய்துவிட்டோம்.

இனிவரும் காலங்களில் மிகக் கவனமாக இருக்கணும். பணம் கொடுக்கலாம். ஆனால் உயிர் திரும்ப வராது. ஆறுதலாக இருங்க.. அப்படின்னு சொல்றதை தவிர வேறு வார்த்தைகள் இல்லை. வேறு வார்த்தைகள் இல்லை. கரூரில் நடக்கவே கூடாத துயரம் நடந்துவிட்டது. யாரையும் குறை சொல்லி பயனில்லை. இனி இதுபோல் நிகழாமல் தவிர்க்க வேண்டும்.



இழப்பை ஈடு செய்ய முடியாது: உயிரை திருப்பி தர முடியாது. விஜயின் கடந்த கூட்டங்களில் போலீசார் பாதுகாப்பு கொடுக்கதான் செய்தனர். பாதுகாப்பு குறைபாடு என பொதுவாக சொல்லக்கூடாது. கூட்ட நெரிசல் சம்பவத்தை படிப்பினையாக ஏற்று இனி வரும் நாட்களில் கவனமாக செயல்பட வேண்டும்.

சின்னக்குழந்தை அல்ல



எனக்கு முட்டுச்சந்திலும், கூட்டம் வராத இடத்திலும் தான் பிரசாரத்திற்கு அனுமதி கொடுப்பார்கள். கூட்டத்திற்கு வருவோர் தண்ணீர் கொண்டு வர வேண்டுமே தவிர அரசைக் குறை கூறக்கூடாது.



திட்டமிட்ட சதி என்றால் சான்றுகளுடன் நிரூபிக்க வேண்டும். இந்த நேரத்தில் அதை விவாதிப்பது சரி அல்ல. அறிவுரை சொல்லும் அளவுக்கு விஜய் சின்னக்குழந்தை அல்ல. அவர் இங்கு வராவிட்டாலும் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். வரச்சொல்வோம். வருவார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.

ஓபிஎஸ் ஆறுதல்



கரூர் கூட்டநெரிசலில் சிக்கி காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நேரில் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் நிருபர்களிடம், ''கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் அரசு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்'' என ஓபிஎஸ் தெரிவித்தார்.

Advertisement