பண்டிகை நாட்களில் பாலிதீன் தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்

திருப்பூர், : கலெக்டர் மணிஷ் நாரணவரே அறிக்கை:

தமிழகத்தில் கடந்த 2019 ஜன., 1ம் தேதி முதல், ஒரு முறை பயன்படுத்தப்படும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உள்ளாட்சி அமைப்புகளும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் தொடர்ந்து சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

எனவே, எதிர்வரும் பண்டிகை நாட்கள் மற்றும் அனைத்து நாட்களிலும் இதுபோன்ற ஒரு முறை பயன்படுத்தும் பாலிதீன் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம். வியாபாரிகள், வர்த்தகர்கள் விற்பனை செய்வதும் வேண்டாம். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்த சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement