மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

புவனகிரி: 'தாய்க்கு ஒரு மரம் நடும்' திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய புவனகிரி ஆலம்பாடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
புவி வெப்பமயமாதலை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மாவட்டத்தில் மாணவர்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் தங்களது வீட்டின் பகுதியில் 'தாய்க்கு ஒரு மரம் நடும்' திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர்.
அதன்படி, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவின்படி, புவனகிரி ஆலம்பாடி அரசுப் பள்ளி மாணவர்கள், பள்ளி மற்றும் வீடுகளில் மரக்கன்றுகள் நட்டு தினசரி தண்ணீர் ஊற்றி பாதுகாப்பதுடன், விதிமுறைகளை பின்பற்றி இணையத்தில் அதற்கான போட்டோக்களை பதிவிட்டனர். இதற்காக அரசின் சான்றிழை ஊக்கப் பரிசுடன் தலைமை ஆசிரியை லதா, மாணவர்களுக்கு வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement