திருக்குறள் பயிலரங்கம்

கடலுார்: பண்ருட்டி அடுத்த கீழக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் பயிலரங்கம் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் புனிதா தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியை உஷாராணி வரவேற்றார்.
மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், திருக்குறள் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர்கள் லட்சுமி பிரபா, அலமேலு, செல்வவாணி ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.
உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், திருக்குறள் புத்தகங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் முருகவேல், ஜெயச்சந்திரன், எஸ்டர் விஜயகுமாரி, லேகா, காந்திமதி, சுமதி பங்கேற்றனர்.
ஆசிரியை மரிய செலின் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement