ரயிலில் ஏழு கிலோ கஞ்சா கடத்தல்

கோவை; ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் ஒன்றில் சோதனை மேற்கொண்டிருந்தனர். வடமாநில வாலிபர் ஒருவர் மூட்டையுடன் அமர்ந்திருந்தார்.

போலீசார் சோதனையில், மூட்டையில் கஞ்சா இருந்தது. அவர் ஒடிசா மாநிலம், பெல்காம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் பனிகிராத்தி, 35 என தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். ஏழு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement