கரூர் துயரம் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு: தவெகவினர் உள்ளிட்ட 3 பேர் கைது

17

சென்னை: கரூர் துயர சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் அவதுறு பரப்பியதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூரில் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த பலர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைக்க, அந்த ஆணையமும் தமது விசாரணையை தொடங்கி உள்ளது.

இந்த சம்பவம் பற்றி பொதுவெளியியில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை பாயும் என்று தமிழக அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டு இருந்தது. சமூகவலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகளைத் தொடர்ந்து 25 பேர் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்து இருந்தனர்.

இந் நிலையில் கரூர் துயரச் சம்பவம் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பியதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் இருவர் தவெகவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பாஜவைச் சேர்ந்தவர்.

அவர்களின் விவரம் வருமாறு;


1. சகாயம் (38) பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர், பாஜ மாநிலச் செயலாளர் (கலை மற்றும் கலாசாரம்)

2. மாங்காடு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன், தவெக உறுப்பினர்

3. ஆவடியைச் சேர்ந்தவர் சரத்குமார்(32) தவெக 46வது வார்டு செயலாளர்

Advertisement