நாகர்கோவில் சிறையில் மோதல்; 13 கைதிகள் மீது வழக்கு
நாகர்கோவில்; நாகர்கோவிலில்உள்ள மாவட்ட சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் இரண்டு பேர் காயமடைந்தனர். 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளுக்கு உணவு வழங்கப்பட்ட போது திடீரென இரண்டு கைதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டு கைதிகளின் தரப்பைச் சேர்ந்தவர்களும் மோதிக்கொண்டனர்.
இதில் பேச்சியப்பன், முத்துராஜ் காயமடைந்தனர். சம்பவம் குறித்து ஜெயிலர் சம்பத் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் பாஸ்கர், இலங்கேஸ்வரன், வேல்முருகன், ஜெயபிரகாஷ், முத்துராஜ், நவீன் உட்பட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாக்குதல் குறித்த விசாரணையும் நடைபெறுகிறது.
மேலும்
-
இந்திய ஜனநாயகம் மீது நடத்தப்படும் தாக்குதல்: கொலம்பியா பல்கலையில் ராகுல் பேச்சு
-
காலையில் குறைந்த தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.560 உயர்வு
-
விஜயின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை: வீடியோவை விமர்சித்த சீமான்
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் விமானங்கள் மோதல்
-
பாரதமாதா உருவம் பொறித்த சிறப்பு நாணயம்!
-
3வது நாளாக தொடரும் பாக்., அரசுக்கு எதிரான போராட்டம்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 12 பேர் பலி