அமெரிக்காவில் ஓடுபாதையில் விமானங்கள் மோதல்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
அமெரிக்காவின் சார்லோட்டி டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நியூயார்க் நகருக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் தரையிறங்கி, ஓடு பாதையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது, அந்த விமானம் அதே நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு விமானம் மீது மோதியது.
இரண்டு விமானங்களின் முகப்பு பகுதிகள் மோதிக் கொண்டன. இதில் தரையிறங்கிய விமானத்தின் இறக்கைகள் சேதம் அடைந்தன. ஒருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு குறித்து விமானிகள் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement