குறைகேட்பு கூட்டம் : 560 மனுக்கள் குவிந்தன

கடலுார் : கடலுாரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், 560 மனுக்கள் பெறப்பட்டன.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் இருந்து 560 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில், டி.ஆர்.ஓ., ராஜசேகரன், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) தங்கமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா, ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement