ஆறு நாளாக ராமேஸ்வரம் மீனவர் மீன் பிடிக்காமல் முடங்கினர்

ராமேஸ்வரம் : ஆறு நாள்களாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கினர்.
செப்., 22 முதல் அக்., 2 வரை நவராத்திரி விழா நடக்கிறது. இதனால் ஹிந்துக்கள் விரதம் இருப்பதால் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுக்கு மாறினர்.
மேலும் ராமேஸ்வரம் பகுதியில் வீசிய சூறாவளியாலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.
கேரளா, கோவை மீன் மார்க்கெட்டுகளில் மீனுக்கு மவுசு குறைந்து விலையும் கடும் வீழ்ச்சி அடைந்தது. இதனால் ராமேஸ்வரம், பாம்பனில் மீன்கள் விலை 50 முதல் 60 சதவீதம் வரை குறைந்தது.
இச்சூழலில் மீன்பிடிக்க சொன்றால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால் செப்.,24 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
6ம் நாளான நேற்றும் மீனவர்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்து வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இதனால் அன்றாட குடும்பச் செலவுக்கு வழியின்றி மீனவர் குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கின்றனர்.
மேலும்
-
பழிக்கு பழியாக சித்தப்பா படுகொலை வில்லியனுாரில் மகன்கள் உட்பட 7 பேர் கைது
-
மாவட்ட தடகள போட்டி பள்ளி மாணவர் தேர்வு
-
2009க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்வில் விலக்கு: மாநில செயற்குழு முடிவு
-
கொலை வழக்கில் 3 பேர் கைது
-
சென்னை - கோவை நேரடி ரயில் வசதி அ.தி.மு.க., எம்.பி., கோரிக்கை
-
சிதம்பரம் அருகே முதலை கடித்து வாலிபர் படுகாயம்