சென்னை - கோவை நேரடி ரயில் வசதி அ.தி.மு.க., எம்.பி., கோரிக்கை
விழுப்புரம்,: சென்னை- கோவை இடையே, நேரடியாக புதிய ரயிலை இயக்க வேண்டும் என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் ரயில்களை, தமிழகத்தின் மேற்கு பகுதியான கோவைக்கு, ஒரே ஒரு ரயில்தான் இணைக்கிறது. அந்த ரயில் சென்னை - மங்களூரு எக்ஸ்பிரஸ், திருச்சி சென்று, அங்கிருந்து கரூர் சென்று, திருப்பூர் வழியாக மறுநாள் காலை 8:00 மணிக்கு கோவையை சென்றடைகிறது.
இதனை தவிர்க்கும் பொருட்டு, சென்னை எழும்பூரிலிருந்து விழுப்புரம், விருத்தாசலம், சேலம் வழியாக கோவை வழியாக குருவாயூர் கோவிலுக்கு செல்வதற்கு ஒரு ரயிலை இயக்க வேண்டும்.
சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம், சேலம், நாமக்கல் வழியாக நேரடியாக பழநி முருகன் கோவிலை சென்றடைவதற்கு ஒரு ரயிலையும், மூன்று மாநிலங்களை இணைக்கின்ற வகையில், புதுச்சேரியில் இருந்து தமிழகம் வழியாக ஆந்திராவில் உள்ள திருப்பதிக்கு வந்தே பாரத் ரயிலை இயக்கிட வேண்டும்.
ஏற்கனவே இயக்கப்படும் தேஜாஸ் ரயிலை, புதுச்சேரியில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டினர் உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகள் பயன்பெறும் வகையில், விழுப்புரம் ரயில் நிலையத்தில், 2 நிமிடம் நிறுத்திச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சென்று கொண்டிருக்கும் ரயிலில் ஒரு குளிர்சாதன பெட்டியை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு; ஒரு சவரன் ரூ.87,040க்கு விற்பனை
-
மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசுவதா? ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு!
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
-
தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!
-
சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உயர்வு: எலான் மஸ்க் புதிய சாதனை!