குறைவழுத்த மின் பிரச்னையால் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் 'கட்'
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம் எலிக்குளம் துணை மின் நிலையப் பகுதியில் தொடர்ந்து நிலவும் குறைந்த மின்னழுத்த பிரச்னையால் 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் குடிநீர் சப்ளை இன்றி பாதிப்படைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம் ஆனந்துார், ராதானுார், ஆய்ங்குடி, திருத்தேர்வளை, கூடலுார், நத்தக்கோட்டை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு புளிச்சவயல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் புளிச்சவயல் பகுதியை உள்ளடக்கிய எலிக்குளம் துணை மின் நிலையத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குறைவழுத்தம் மின்சப்ளை நிலவுவதால் புளிச்சவயல் கூட்டுக் குடிநீர் பம்பை இயக்க முடியாமல் கூட்டுக் குடிநீர் திட்டம் முடங்கி உள்ளது.
இதனால் இந்தத் திட்டத்தால் பயனடையும் 50-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் குடிநீர் சப்ளையின்றி பாதிப்படைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், எலிக்குளம் துணை மின் நிலைய பகுதியில் நிலவும் குறைந்த மின்னழுத்த பிரச்னையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தினர்.
மேலும்
-
பழிக்கு பழியாக சித்தப்பா படுகொலை வில்லியனுாரில் மகன்கள் உட்பட 7 பேர் கைது
-
மாவட்ட தடகள போட்டி பள்ளி மாணவர் தேர்வு
-
2009க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்வில் விலக்கு: மாநில செயற்குழு முடிவு
-
கொலை வழக்கில் 3 பேர் கைது
-
சென்னை - கோவை நேரடி ரயில் வசதி அ.தி.மு.க., எம்.பி., கோரிக்கை
-
சிதம்பரம் அருகே முதலை கடித்து வாலிபர் படுகாயம்