கோயில்களில் நவராத்திரி பூஜை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்பாளின் அருளாசி பெற்றனர்.

விருதுநகரில் பராசக்தி மாரியம்மன் கோயில், வெயிலுகந்தம்மன் கோயில், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், ரெங்கநாத சுவாமி கோயில், மீனாட்சி சொக்கநாதர் கோயில், வழிவிடு விநாயகர் கோயில்களில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அருப்புக்கோட்டை அமுத லிங்கேஸ்வரர் கோயிலில் சரஸ்வதி பூஜை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடந்தது. முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது.

சிவகாசி சிவன் கோயில், சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், மாரியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், பேச்சியம்மன் கோயில், துர்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சாட்சியாபுரம் கங்கைகொண்ட மாரியம்மன் கோயில், ரிசர்வ் லைன் முத்துமாரியம்மன் கோயில், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில், கரு நெல்லி நாதர் கோயில், மாரியம்மன் கோயில், 52 வீட்டு காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் துர்கை அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

அனைத்து கோயில்களிலும் கொலு வைக்கப்பட்டு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement