கீழச்சிவல்பட்டி ரோட்டில் குறுகிய பாலத்தால் விபத்து

திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம் கீழச்சிவல்பட்டிக்கு செல்லும் விராமதி ரோட்டில் குறுகிய பாலத்தை விரிவுபடுத்தி புதுப்பிக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.

திருப்புத்துார் ஒன்றியம் கீழச்சிவல்பட்டிக்கு புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து விலக்கு ரோடு பிரிகிறது. திருப்புத்துாரிலிருந்து செல்பவர்கள் விராமதி ரோட்டில் சென்று கீழச்சிவல்பட்டி செல்ல வேண்டும். இந்த ரோட்டில் பல இடங்களில் பாலம் விரிவாக உள்ளது. ஆனால் புதுக்கண்மாய்க்கு செல்லும் பாசனக் கால்வாயில் குறுகிய பாலம் உள்ளது. இதனால் இப்பகுதியில் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்கும் போது விபத்துக்குள்ளாகின்றன. குறிப்பாக இரவில் வாகனப் போக்குவரத்து சிரமமாக உள்ளது. இதனால் இந்த பாலத்தை விரிவுபடுத்த இப்பகுதியினர் கோரியுள்ளனர்.

Advertisement