புத்தக இணைப்புகளில் முன்னோடி
தினசரி பத்திரிகைகளின் இணைப்பாக புத்தகங்களை வெளியிடும் புதுமையை துவக்கியதும் தினமலர் தான்.
தினமலர் வாரமலர் என்ற 32 பக்க பல்சுவை புத்தகத்தை இணைப்பாக வெளியிட்டது. வார பத்திரிகைகளில் மட்டுமே வெளியான ஜனரஞ்சகமான பகுதிகள்அனைத்தும் கொண்டதாக வாரமலர் இருந்தது. பெண்களை கவர சிறுகதைகள், தொடர்கதைகள், சினிமா பகுதி, அந்துமணி கேள்வி பதில் பகுதி, இளைஞர்களை ஈர்க்க ருசிகரமான வெளிநாட்டு செய்திகள், அறிவுத்திறனை சோதிக்கும் பகுதி, வாசகர்களுக்கு பரிசுகளை அள்ளித்தரும் போட்டி பகுதி என, பல பகுதிகளை இணைந்த கலவையாக வாரமலர் இருந்தது.
சென்னை பதிப்பில் வாரமலர் இதழ்வெளியானதும் அதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. உடனே தினமலர் மற்ற பதிப்புகளிலும் வாரமலர் இணைப்பு வெளியானது.
தொடர்ந்து, பள்ளி குழந்தை களுக்கும் பொது அறிவை வளர்க்கும் வகையில் இணைப்பு வெளியிடுங்கள் என வாசகர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. அதன் பலனாக வெளியானதுதான் சிறுவர் மலர். இதுவும் 32 பக்க புத்தக வடிவில் வெளியானது. புராண, இதிகாச படக்கதைகள், சிறுகதைகள், மாணவர்களின் அறிவுத்திறனை சோதிக்கும் பகுதிகள், அறிவியல் அதிசயங்கள், என, இந்த புத்தகத்தில் நிறைய பகுதிகள் இடம் பெற்றன. மேலும் வாசகர்களின் குழந்தைகளின் படங்கள் அட்டை படங்கள், மற்றும் உள் பக்கங்களிலும் இடம் பெற்றன. காமிக்ஸ் புத்தகங்கள் அதிக அளவில் விற் பனையான காலத்தில் அதற்கு போட்டியாக வெளியான தினமலர் சிறுவர் மலர் இதழ் வாசகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து ஆன்மிக மலர், தீபாவளி மலர், தொழில் மலர் என பல புத்தகங்கள் தினமலர் இணைப்பாக வெளியாக துவங்கியது. மற்ற பத்திரிகைகளும் இதை பின்பற்ற தொடங்கின.
மேலும்
-
ரஷ்யாவின் முக்கிய இலக்குகளை தாக்க உக்ரைனுக்கு ஆயுதம் தருகிறது அமெரிக்கா
-
காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; பாலஸ்தீனர்கள் 52 பேர் பலி
-
போர் நிறுத்த ஒப்பந்தம் நிராகரிப்பு எதிரொலி: சத்தீஸ்கரில் 103 நக்சல்கள் சரண்
-
மத்திய பிரதேசத்தில் சோகம்; குளத்தில் டிராக்டர் கவிழ்ந்ததில் 10 பேர் பலி
-
இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
-
அரசு செயலாளர்களை வைத்து அரசியல்: இபிஎஸ் குற்றச்சாட்டு