காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; பாலஸ்தீனர்கள் 52 பேர் பலி

ஜெருசலேம்: காசா பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 52 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, கடந்த, 2023ம் ஆண்டு அக்., 7ல் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து ஹமாஸ் மீது இஸ்ரேல் துவங்கிய போர், இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ளது.
இந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட 20 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதை ஏற்பதாக இஸ்ரேல் கூறியுள்ள நிலையில், ஹமாஸ் மவுனம் காக்கிறது. இதையடுத்து அந்த அமைப்புக்கு மூன்று நாள் டிரம்ப் கெடு விதித்துள்ளார்
இந்த சூழலில் காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்த தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 52 பேர் கொல்லப்பட்டனர். காசா நகரில் 10 உடல்களும், மத்திய காசாவில் 14 உடல்களும், தெற்கில் 28 உடல்களும் கண்டெடுக்கப் பட்டன.
காசா பகுதியில் விடியற்காலையில் இருந்து இஸ்ரேல் படையினர் தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் இந்த உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளது என ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்து உள்ளது.
சிவில் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகள், சிலர் வான்வழித் தாக்குதல்களிலும், மற்றவர்கள் ட்ரோன் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடுகளிலும் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர். காசா போரினை முடிவுக்கு கொண்டு வர அமைதி திட்டத்தை அதிபர் டிரம்ப் வெளியிட்டு இருக்கும் சூழலில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்
-
'தினமலர்' நாளிதழுக்கு பெற்றோர் பாராட்டு பெற்றோர் பாராட்டு
-
காந்தி ஜெயந்தி விழா : இறையன்பு பங்கேற்பு
-
கஞ்சா விற்பனை: எருமப்பட்டி வாலிபர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
-
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா
-
குழந்தைகளின் பயத்தை போக்க வேண்டும் டாக்டர் சாமிநாதன் 'பளீச்'
-
இரவு நேர திருட்டை தடுக்க ரோந்து பணியில் போலீசார் தீவிர கவனம் செலுத்த வேண்டுகோள்