'தினமலர்' நாளிதழுக்கு பெற்றோர் பாராட்டு பெற்றோர் பாராட்டு

குழந்தைகளுக்கு மகிழ்ச்சி
பள்ளிக்கு குழந்தையை அழைத்து வந்தபோது பயந்தனர். சக குழந்தைகளை பார்த்தபோது ஓடி விளையாடி மகிழ்ந்தனர். இங்கு, வழங்கப்பட்ட குழந்தைகளின் கூடிய புகைப்பட சான்றிதழ், குழந்தை பெரியவனாகி பார்க்கும்போது சந்தோஷம் ஏற்படுத்தும்.
-நித்யா, விருத்தாசலம்.
புதுவிதமான நிகழ்ச்சி
இது புதுவிதமான நிகழ்ச்சியாக உள்ளது. இதேபோன்ற நிகழ்ச்சியை 'தினமலர்' தொடர்ந்து நடத்த வேண்டும். நெல் மணியில் அ... ஆ... சொல்லித்தரும் நிகழ்ச்சி அருமையாக இருந்தது. 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
-சந்தியா, விருத்தாசலம்.
சான்றிதழ் 'பொக்கிஷம்'
'தினமலர்' அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்களின் மடியில் குழந்தைகளை அமர வைத்து அவர்களுக்கு எழுத கற்றுக்கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையின் புகைப்படத்துடன் வழங்கப்பட்ட சான்றிதழ் 'பொக்கிஷம்' போன்று பாதுகாத்து வைத்திருப்போம்.
-சுவேதா, ஸ்ரீநெடுஞ்சேரி.
படிக்கும் ஆர்வத்தை துாண்டுகிறது
விஜயதசமி நாளில் குழந்தைகளை கல்வி கற்க வைக்கும் இதுபோன்ற நிகழ்ச்சி மாணவர்கள் சிறு வயதிலேயே படிக்கும் ஆர்வத்தை துண்டும் விதமாக உள்ளது. இப்பகுதியில் வேறு எங்கும் இதுபோன்று நிகழ்ச்சிகள் நடத்தவில்லை. முதன்முறையாக இப்பள்ளியில் நடந்தது மகிழ்ச்சி.
-தீபா, விருத்தாசலம்.
மேலும்
-
மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லை: நாட்டின் மொத்த வரி வசூலில் 24 % செலுத்தும் ஜெயின் சமூகம்!
-
ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்; பீஹாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பரிதாப பலி
-
ஆப்பரேஷன் சிந்தூரின் போது 10 பாக்., விமானங்கள் அழிப்பு; விமானப்படை தளபதி அறிவிப்பு
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆய்வு மேற்கொண்ட பாஜ குழு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்
-
இன்று 14 மாவட்டங்கள், அக்., 5ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
-
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்