ரூ.8 லட்சம் வெடி பதுக்கல்: குடோனுக்கு 'சீல்'

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் அருகே அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த ரூ. 8 லட்சம் மதிப்பிலான நாட்டு வெடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், புத்துார் அருகே அனுமதியின்றி நாட்டு வெடிகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், புத்துார் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையிலான பேலீசார், நேற்று கொத்தவாசல் கிராமத்தில், சிமென்ட் ஷீட் போடப்பட்டிருந்த கொட்டகையில் சோதனை செய்தனர்.
அதில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் 80 மூட்டை நாட்டுவெடிகள் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து வெடிகளை பறிமுதல் செய்து, குடோனுக்கு சீல் வைத்தனர். இச்சம்பவம் தொர்டபாக சேத்தியாதோப்பு ராஜா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தானின் அடக்குமுறையே காரணம்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் போராட்டம் குறித்து இந்தியா கருத்து
-
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
-
இத்தாலியில் துயரம்; சாலை விபத்தில் நாக்பூரை சேர்ந்த இருவர் பலி
-
தவெகவுக்கு ஐகோர்ட் கண்டனம்: கரூர் சம்பவம் பற்றி விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழு
-
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
-
மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லை: நாட்டின் மொத்த வரி வசூலில் 24 % செலுத்தும் ஜெயின் சமூகம்!
Advertisement
Advertisement