கைது செய்யும் சூழல் வந்தால் விஜயை கைது செய்வோம்: சொல்கிறார் துரைமுருகன்

21


சென்னை: கரூர் சம்பவத்தில் விஜய்யை கைது செய்யும் நிலை வந்தால் கைது செய்வோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


வேலூர், காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: எவ்வளவு மழை வந்தாலும் தாங்க கூடிய அளவிற்கு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். கரூர் விவகாரத்தில் நீதிபதிகள் சொல்வது தான் மெயின்.


நீதிபதிகள் உண்மையை சொல்லி உள்ளார்கள். கள்ளக்குறிச்சி சம்பவத்தின்போது இருந்த சூழல் வேறு; கரூரில் 41 பேர் பலியானது சாதாரணம் அல்ல. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.



நிருபர்: விஜய் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், கட்சியினரை ஏதும் தொடக் கூடாது என்று சொல்லி இருக்கிறாரே?



துரை முருகன் பதில்: விஜய் ஒரு தலைவர், அவர் தக்கப்படி கட்சியினர் இடம் என்ன பேச வேண்டுமோ அதனை பேசுகிறார். தவெக தலைவர் விஜய்யை கைது செய்யும் நிலை வந்தால் கைது செய்வோம்.


தேவையில்லாத சூழலில் பண்ண மாட்டோம். அனாவசியமாக நாங்கள் யாரையும் கைது செய்ய மாட்டோம்.

Advertisement