கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

சென்னை: கும்பகோணம் பல்கலை தொடர்பான மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, கடந்த ஏப்., மாதம் சட்டசபையில் மசோதா ஒன்றையும் தமிழக அரசு நிறைவேற்றியது. அந்த மசோதாவில் பல்கலை வேந்தராக முதல்வரும், இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரும் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தார். வேந்தரின் அனுமதியில்லாமல் கவுரவ பட்டங்களை வழங்க முடியாது, எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
கவர்னரின் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கவர்னர் ரவி மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும், கவர்னரின் முடிவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், அதனை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்திருப்பது சட்டப்பேரவையின் முடிவுக்கு எதிரானது என்றும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.




மேலும்
-
தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும்… இருமல் மருந்து விற்பனைக்குத் தடை
-
அக்.,8ல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்
-
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் 'அரட்டை'யில் இணையுங்கள் வாசகர்களே!
-
அமைதியை ஆயுதங்களால் சீர்குலைத்தால் தகுந்த பதிலடி; நக்சலைட்டுகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை
-
இந்திய பல் மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!
-
மக்களை பாதுகாக்க எந்த எல்லையையும் தாண்டுவோம்; சொல்கிறார் ராஜ்நாத்சிங்