வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 140 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது; சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
ஆமதாபாத்தின் மோடி மைதானத்தில் முதல் டெஸ்ட் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 121/2 ரன் எடுத்து, 41 ரன் பின்தங்கியிருந்தது. நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஒருபக்கம் அனுபவமில்லா வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் கைவலிக்க பந்துவீசுவதும் மறுபக்கம் நல்ல 'பார்மில்' உள்ள இந்திய பேட்டர்கள் அடிச்சு நொறுக்குவதும் தொடர்ந்தது.
இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 448/5 ரன் எடுத்து, 286 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ஜடேஜா (104), வாஷிங்டன் சுந்தர் (9) அவுட்டாகாமல் இருந்தனர். இந்நிலையில் இன்று (அக்., 04) 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தது.
இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 45.1 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதனால், இந்திய அணி, 140 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது; சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 4 விக்கெட்களை கைப்பற்றினார். சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும்
-
உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல்; பயணிகள் பலர் படுகாயம்!
-
இந்தியா எனக்கு கோவில் போன்றது; பாக்., கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா உருக்கம்
-
நீரவ் மோடி நாடு கடத்தும் விவகாரம்; பிரிட்டனுக்கு இந்தியா கொடுத்த உத்தரவாதம்
-
திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவாவின் பங்களிப்பு தேச ஒற்றுமைக்கு ஊக்கமளிக்கும்; பிரதமர் மோடி
-
இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ் அமைப்பு முடிவு; உலக நாடுகள், ஐநா வரவேற்பு
-
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு