அறிவு சார்ந்த வலிமையே இந்தியாவின் மாபெரும் பலம்; பிரதமர் மோடி பெருமிதம்


புதுடில்லி: ''இந்தியா அறிவும், திறமையும் கொண்ட நாடு. இந்த வலிமையே நமது மிகப்பெரிய சக்தி'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பீஹார் மாநிலத்துக்கு ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டங்களை டில்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: கர்ப்பூரி தாக்கூருக்கு வழங்கப்பட்ட மிக உயரிய விருதை திருட முயற்சிக்கின்றனர். அவர்களிடம் பீஹார் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று பீஹார் மாநிலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு இது உத்தரவாதம் அளிக்கும்.

அறிவு, திறமை



இந்தியா அறிவும், திறமையும் கொண்ட நாடு. இந்த வலிமையே நமது மிகப்பெரிய சக்தி.
இன்று, இந்தியா உலகில் அதிக இளைஞர்களை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். பீஹார் அதிக இளைஞர் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும். எனவே, பீஹாரின் இளைஞர்களின் வளர்ச்சி அதிகரிக்கும் போது, ​​நாட்டின் பலமும் அதிகரிக்கிறது. பீஹார் இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் வலுப்படுத்த தேஜ அரசு உறுதிபூண்டுள்ளது.



ஜிஎஸ்டி வரி குறைப்பால் இருசக்கர வாகனங்கள் விலை குறைந்துள்ளதால், பீஹார் மாநில இளைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதாக ஒருவர் என்னிடம் கூறினார். பட்டதாரிகளுக்கு மாத உதவி தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது. பீஹாரில் இருந்து பெருமளவில் மக்கள் இடம்பெயர்வதற்கு முந்தைய ஆர்ஜேடி கட்சி ஆட்சியின் போது கல்வியின் மோசமான நிலை ஒரு முக்கிய காரணம்.

தீர்மானங்கள்



நிலைமையை மேம்படுத்தி மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் நிதிஷ் குமார் தலைமையிலான தேஜ கூட்டணி அரசு கொண்டு வந்தது. பீஹார் அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக புதிய தீர்மானங்களை எடுத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது அடுத்த ஐந்து ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பெறும் மக்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


@block_G@

நிதிஷ் குமார் பெருமிதம்

பீஹாரில் 5 லட்சம் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ''இந்த நிதியுதவி இளைஞர்கள் தங்களுக்கு தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளவும், போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ளவும் உதவும்'' என பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.block_G

Advertisement