உதவியாளர் பணிக்கு அக்.11 தேர்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாகவுள்ள 67 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அக்., 11 அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை சிவகங்கை அரசு மகளிர் மற்றும் மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் தேர்வு நடக்க உள்ளது. நுழைவு சீட்டு இன்று முதல் www.drbsvg.net இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement