மலாய் பேடா

தேவையான பொருட்கள்
பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - அரை கப்
கார்ன்பிளவர் - மூன்று ஸ்பூன்
குங்குமப் பூ - ஐந்து ஸ்பூன்
ஏலக்காய், சோம்பு - சிறிதளவு
சிட்ரிக் அமிலம் - சிறிதளவு
பிஸ்தா - சிறிதளவு
செய்முறை:
முதலில் பாலை ஒரு வாணலியில் ஊற்றி நன்றாக பாதியாக வரும் வரை காய்ச்ச வேண்டும். குங்குமப் பூவை மற்றொரு பாத்திரத்தில் போட்டு சூடு செய்து அத்துடன் சிறிது பாலை ஊற்றி, குங்குமப்பூ கரையும் வரை கலக்க வேண்டும். இத்துடன் காய்ச்சிய பாலை ஊற்றி சர்க்கரையை சேர்த்து கிளறிவிடவும். பின்னர் சிட்ரிக் அமிலத்தை சிறிது தண்ணீரில் கலக்கி இத்துடன் சிறிது சிறிதாக கட்டி சேராமல் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். கார்ன் பிளவர் மாவுடன் சிறிது பாலை சேர்த்து கலக்கி, இந்த கலவையுடன் சேர்க்கவும். தொடர்ந்து கிளறிவிட்டுக் கொண்டிருக்கவும். ஏலக்காய் மற்றும் சோம்புவை பொடி செய்து இத்துடன் சேர்க்கவும். சுவையான மலாய் பேடா ரெடி.
மேலும்
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்து கொள்வோம்: மோகன் பகவத்
-
காசாவில் அதிகாரத்தை விட்டுக்கொடுக்காவிட்டால் ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்படும்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
-
ரஷ்ய டிரோன் தாக்குதலில் உக்ரைனில் 5 பேர் பலி
-
தமிழ்நாடு யாருடன் போராடும்: கவர்னரின் விமர்சனத்துக்கு முதல்வர் பதில்
-
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
-
பீஹார் சட்டசபை தேர்தலில் முதல்முறையாக அமலாகும் புதிய சீர்திருத்தங்கள்