நெட்பிளிக்ஸ் தளம் குறித்து எலான் மஸ்க் புகார்; 15 பில்லியன் டாலர் சரிவு

வாஷிங்டன்: நெட்பிளிக்ஸ் தளத்தை குறை கூறி எலான் மஸ்க் வெளியிட்ட பதிவு காரணமாக, அந்த நிறுவனத்தின் மதிப்பு பங்குச் சந்தையில் 15 பில்லியன் டாலர் சரிந்துள்ளது.
தனது நெட்பிளிக்ஸ் சந்தாவை ரத்து செய்த தொழிலதிபர் எலான் மஸ்க், அந்த நிறுவனத்தை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அவர், ''உங்கள் குழந்தைகளின் நலனுக்காக நெட்பிளிக்ஸ் சந்தாவை ரத்து செய்யுங்கள்'' என்றார்.
'டெட் எண்ட்: பாராநார்மல் பார்க்' என்ற நெட்பிளிக்ஸ் அனிமேஷன் தொடரை உருவாக்கிய ஹமிஷ் ஸ்டீல் மீது தான் எலான் மஸ்கிற்கு கோபம் ஆரம்பித்தது. ஹமிஷ் ஸ்டீல் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட பழமைவாத ஆர்வலர் சார்லி கிரிக் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், நெட்பிளிக்ஸ் தளத்தை குறை கூறி எலான் மஸ்க் வெளியிட்ட பதிவு காரணமாக, அந்த நிறுவனத்தின் மதிப்பு பங்குச் சந்தையில் 15 பில்லியன் டாலர் சரிந்துள்ளது.
ஒரு பில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் 8 ஆயிரத்து 800 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும்
-
அமித் ஷா வருகையின்போது குடிபோதையில் இருந்த போலீஸ் அதிகாரி: சஸ்பெண்ட் செய்தது கேரள அரசு
-
அரிய வகை கனிமங்களை கைப்பற்ற உலக நாடுகள் கடும் போட்டி: ஜெய்சங்கர்
-
அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த இடைக்கால அனுமதி வேண்டும்; அன்புமணி கோரிக்கை
-
கப்பலில் துன்புறுத்தியதாக புகார்; கிரெட்டா தன்பெர்க் சொல்வது பொய்; அடித்துச் சொல்கிறது இஸ்ரேல்!
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்து கொள்வோம்: மோகன் பகவத்
-
காசாவில் அதிகாரத்தை விட்டுக்கொடுக்காவிட்டால் ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்படும்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை