பஸ்கள் மோதியதில் கண்ணாடி சேதம்

தேனி : தேனி கர்னல் ஜான்பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ நிறுவத்துவது தொடர்பாக இருதரப்பு இடையே மோதல் நிலவி வந்ததால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆட்டோ டிரைவர்களுடன் டி.எஸ்.பி.,முத்துக்குமார் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தனர்.

அப்போது பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரைக்கு தனியார் பஸ் சென்றது. அதே சமயம் விருதுநகரில் இருந்து தனியார் பஸ் தேனிக்கு வந்தது. அதிவேகத்தில் வந்த இருபஸ்களும் ஆண்டிபட்டி பஸ்கள் வெளியேறும் பகுதியில் உரசிக்கொண்டன.

இதில் ஒருபஸ்சில் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்தது. சேதமடைந்த பஸ் டிரைவர், கண்டக்டர்கள் உரசிய மற்றொருபஸ் டிரைவரை அடிக்க பாய்ந்தனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தகராறை விலக்கி விட்டனர். பின் இரு பஸ்களும் புறப்பட்டு சென்றன.

Advertisement