சின்னச்சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

ஆண்டிபட்டி : மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் மேகமலை சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
மேகமலை அடிவாரத்தில் கோம்பைத்தொழு அருகே மலைப்பகுதியில் சின்னச் சுருளி அருவி உள்ளது.
ஸ்ரீவி., மேகமலை புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு தேனி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அருவியில் ஆண்டு முழுவதும் நீர் வரத்து இருந்தாலும் மழைக்காலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் பெய்த மழையால் அருவியில் தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
-
விவசாயிகளுக்கு உதவுவதில் பிரதமர் எப்போதும் தாமதிக்க மாட்டார்; அமித்ஷா
-
நவ.,22க்குள் பீஹார் சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் கமிஷனர் உறுதி
-
நெட்பிளிக்ஸ் தளம் குறித்து எலான் மஸ்க் புகார்; 15 பில்லியன் டாலர் சரிவு
-
நேபாளத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் 47 பேர் உயிரிழப்பு
-
மலாய் பேடா
Advertisement
Advertisement