கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!

14


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ். இவர், ஆந்திராவின் தொழில் நுட்ப துறை அமைச் சராக உள்ளார். ஆந்திராவிற்கு முதலீ டுகளை கொண்டு வருவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். குறிப் பாக அருகே உள்ள, காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடாகாவின் தொழிற்சா லைகளை ஆந்திராவிற்கு கொண்டு வர முயற்சித்து வருகிறார்.

பெங்களூரில் ஏராளமான போக்கு வரத்து பிரச்னை உள்ளதாக தொழி லதிபர்கள் வெளிப்படையாக புகார் செய்துள்ளனர். மேலும், கர்நாடகா வில் உள்கட்டமைப்பு போதிய அளவு இல்லை. மழை பெய்தால் பிரச்னை என்றும், தொழிலதிபர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். 'ஆந்திராவின் அனந்தபூரில் உலக தரத்தில் வசதிகள் உள்ளன.



நீங்கள் அங்கு உங்கள் தொழிற்சாலைகளைத் தொடங் கலாம்' என, அவர்களிடம் பேசியுள்ளார் லோகேஷ். இது, கர்நாடகாவின் அமைச்சரும், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகனுமான பிரியங்க் கார்கேவை வெறுப்பேற்றியுள்ளது. ஆந்திரா ஒட்டுண்ணியாக மாறிவிட்டது என அவர் விமர்சித்துள்ளார். இதற்கிடையே இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.

'கர்நாடகாவில் தொழில் செய்வதில் ஏகப்பட்ட பிரச்னைகள்' என, மைசூரில் ரம் தயாரிக்கும் தொழிற்சாலையின் அதிபர் ஒருவர் சொல்லியிருந்தார். உடனே அவரை தொடர்பு கொண்டது ஆந்திரா அரசு. 'உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து தருகிறோம்' என, நேசக்கரம் நீட்டியுள்ளார் லோகேஷ்.

Advertisement