இது நடந்த உடனே காசாவில் போர் நிறுத்தம்: அதிபர் டிரம்ப் முக்கிய தகவல்

6

வாஷிங்டன்: ''காசா அமைதி திட்டத்தை ஹமாஸ் நடைமுறைப்படுத்திய உடனே காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும்'' என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.


மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இங்கு போர் நிறுத்தம் அமலுக்கு கொண்டு வர அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.

அதிபர் டிரம்ப் விதித்த கெடு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டது. அமைதிப் பேச்சுவார்த்தைக்காக, காசாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


காசாவின் ஒருசில பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெற இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தகவலை ஹமாஸ் அமைப்பினரிடம் நாங்கள் தெரிவித்துவிட்டோம்.


காசா அமைதி திட்டத்தை ஹமாஸ் நடைமுறைப்படுத்திய உடனே காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும். பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையை நாங்கள் செய்து வருகிறோம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement