அக்.,6ல் அறுவடை முழு நிலவு: 'சூப்பர் மூன்' பவுர்ணமிக்கு இப்படியொரு சிறப்பு

1

நமது சிறப்பு நிருபர்





பூமிக்கு அருகில் நிலவு வரும் போது ஏற்படும் வானியல் நிகழ்வு 'சூப்பூர் மூன்'. இந்திய நேரப்படி வரும் அக். 6ல் சூரியன் மறைவுக்குப்பின் நிகழ்கிறது. இதை எவ்வித பிரத்யேக உபகரணங்கள் இன்றி பார்க்கலாம்.


பூமி - நிலவு இடையிலான சராசரி துாரம் 3.84 லட்சம் கி.மீ., நிலவு, ஒருமுறை பூமியை சுற்றி வருவதற்கு 27 நாட்கள் ஆகிறது. இதில் அதிகபட்சமாக 4.06 லட்சம் கி.மீ., துாரத்திலும், குறைந்தபட்சமாக 3.56 லட்சம் கி.மீ., துாரத்தில் இருந்தும் நிலவு, பூமியை சுற்றி வரும்.


இந்நிலையில் பூமிக்கு அருகில் நிலவு வரும் போது, வழக்கமாக அளவில் தெரியும் நிலவை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் தெரியும். இது 'சூப்பர் மூன்' என அழைக்கப்படுகிறது.


தற்போது வர உள்ள சூப்பர் மூன் சராசரியை விட சற்று பெரியதாகவும், பிரகாசமாகவும் தோன்றும் என நாசா தெரிவித்துள்ளது. முழு நிலவின் ஒளி விவசாயிகள் இருட்டிய பிறகும் பயிர்களை சேகரிக்க பேருதவியாக இருக்கும். விவசாய நாட்டுப்புற கதைகளில் இருந்து இதன் புனைப்பெயர் வந்தது. இது தான் அறுவடை முழு நிலவு என்று சொல்வதற்கு காரணம்.


பவுர்ணமி தினத்தில் 'சூப்பர் மூன்' ஏற்படும். ஆனால் அனைத்து பவுர்ணமியிலும் 'சூப்பர் மூன்' நிகழ்வதில்லை. அடுத்த 'சூப்பர் மூன்' 2025 நவ. 7, டிச. 4ல் நிகழ்கிறது. 1979ல் வானியல் நிபுணர் ரிச்சர்டு நுாலே 'சூப்பர் மூன்' பெயரை அறிமுகப்படுத்தினார்.

Advertisement