காசா அமைதி திட்டத்தில் மாற்றம் செய்ய அவசியமில்லை; அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

வாஷிங்டன்: ''காசா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த திட்டத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில், காசா திட்டம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அதிபர் டிரம்ப் அளித்த பதில்: காசா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த திட்டத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். திட்டம் அமலுக்கு வந்தால் மத்திய கிழக்கில் முதல் முறையாக அமைதி நிலவும்.
பிணைக்கைதிகளை உடனடியாக மீட்போம். இப்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அநேகமாக இரண்டு நாட்கள் ஆகும். இது, முழு அரபு உலகத்திற்கும், முஸ்லிம் உலகத்திற்கும் ஒரு பெரிய விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.
பேச்சுவார்த்தைகள் வெற்றி
இது குறித்து அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்த வார இறுதியில், ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பது, காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து மிகவும் முக்கியமான விவாதங்கள் நடந்துள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாகவும், விரைவாகவும் நடந்து வருகின்றன. மேலும் அனைவரும் விரைவாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நூற்றாண்டு பழமையான மோதலை நான் தொடர்ந்து கண்காணிப்பேன். நேரம் மிகவும் முக்கியமானது. யாரும் விரும்பாத இரத்தக்களரிக்கு முடிவு கொண்டு வருவோம்.
இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும்
-
சபரிமலை தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரம்; கேரள சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளி
-
தேனி ஆசிரியருக்கு விருது வழங்கி கவுரவிப்பு
-
எங்கள் நிறுவன வளர்ச்சியின் ஓர் அங்கம் 'தினமலர்'
-
குடும்பத்தின் ஓர் அங்கம் 'தினமலர்' நாளிதழ்
-
பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அன்புமணி தகவல்
-
அமெரிக்காவில் தொடரும் அதிர்ச்சி; இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுட்டுக்கொலை