'எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?'
சென்னை : ''தமிழகத்தில் நான் பயணம் செய்யும் போது, சுற்றுச்சுவர்களில், 'தமிழகம் போராடும்' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது; யாருடன் போராடும்?'' என, கவர்னர் ரவி கேள்வி எழுப்பினார்.
சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில், வள்ளலாரின், 202வது பிறந்த நாள் விழா மற்றும் திருஅருட்பா நுால் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இதில், கவர்னர் ரவி பேசியதாவது:
தமிழக கவர்னர் மாளிகை, கடந்த இரண்டு நாட்களாக ஆசீர்வதிக்கப்பட்ட இடமாக, ஆன்மிக கூடமாக இருந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக நடந்த வள்ளலாரின் போதனைகள், இந்த இடத்தை புனிதமாக்கி விட்டன.
வள்ளலாரின் போதனைகள், உலகில் இப்போது நடக்கும் பிரிவினைவாதம், வறுமை போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணக் கூடியதாக உள்ளன. அவரின் தத்துவங்கள் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தன. ஒவ்வொரு நாளும், பத்திரிகைகள் வாயிலாக தீண்டாமை எனும் பெயரில், கொலை, அடிதடி சம்பவங்களை காணுகிறேன். பட்டியலின சமூகத்தினர், நம் சகோதர, சகோதரிகள். அவர்களை இந்த சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கக்கூடாது.
இதுபோன்ற சம்பவங்கள், தமிழகத்திலும் நடக்கின்றன. தமிழகம், கல்வியில் சிறந்த மாநிலமாக உள்ளது. உயர் கல்வி சேர்க்கையில், தேசிய சராசரியை விட, தமிழகத்தில் சேர்க்கை சதவீதம் அதிகம். மேலும், எழுத்தறிவு பெற்றவர்கள் ஏராளம். இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வருத்தம் அளிக்கிறது.
இந்த பிரச்னைகளுக்கு, சமுதாய சீர்திருத்தமே தீர்வு. ஆனால், இதுபோன்ற விஷயங்கள் நம்மை சென்றடைய கூடாது என்பதில், அரசியல், கண்ணும் கருத்துமாக உள்ளது. நம்மை பிரித்து ஆள்வதையே, அரசியல் ஒரு மார்க்கமாக கொண்டுள்ளது. இப்படி இருந்தால் தான், அவர்கள் ஆட்சியில், அவர்களுக்கு சாதகமாக செய்து கொள்ள முடியும். சமூக பாகுபாடுகளை களைய, வள்ளலாரின் பாடல்களே ஒரே வழி. அதை பாடங்கள் வாயிலாக, நம்முடைய அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும். பாடங்கள் மூலமாக சென்றால், குழந்தைகளின் மனதில் பதியும்.
அதனால், இனி வரும் சமுதாயம் பாகுபாடு இன்றி உருவாகும்.
தமிழகம் முழுதும் நான் பயணம் மேற்கொள்ளும் போது, அங்குள்ள சுவர்களை பார்ப்பேன். அதில், 'தமிழகம் போராடும்' என்று எழுதப்பட்டிருக்கும்; யாருடன் போராடும்? தமிழகத்தை எதிர்த்து யாரும் போராடவில்லை. நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள்.
இதுபோன்ற மனநிலையில் இருந்து அனைவரும் மாற வேண்டும். யாருடனும் இங்கு சண்டை கிடையாது. நாம் அனைவரும் இணைந்து முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நல்ல சட்டங்களை நடைமுறைப்படுத்த கவர்னருடன் போராட்டம் மாநில நிதியை பெற மத்திய அரசிடம் போராட்டம் எல்லாவற்றிலும் குறை காணும் எதிர்க்கட்சிகளுடன் போராட்டம்
கோபுரத்தை பொம்மைகள் தாங்கிப் பிடிக்கின்றன.
உங்களை போன்ற மதவாத சனாதன சமூக விரோதிகளுடன்.
CAA போராட்டம் நடந்த போது இந்திய இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு துரத்தி இந்த சட்டம் என்று திமுக உள்பட பல கட்சிகள் குரைத்தன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை 30 கோடி இஸ்லாமியர்களில் ஒருவர் கூட பாகிஸ்தான் போகவில்லை. திருட்டு பங்களாதேஷ்கள் சுமார் 2 கோடி பேர் இந்தியாவில் இருக்கிறார்கள்.
வேண்டாத இலவசங்களை நிறுத்தினாலே கடன் தொல்லை இருக்காது. மற்ற இலவசங்களை நிறுத்தினால் மக்கள் திண்டாடிவிடுவர் எனும் போது எதைவைத்து முன்னேறிய மாநிலம்ன்னு ரீல் விடறாங்க? எல்லா வேலைகளிலும் வெளிமாநில ஆட்கள் மயம். ஆனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ளூர் பட்டதாரிகள் நீண்ட கியூ. இதிலென்ன பெருமை?.
அய்யா கோர்ட்டுக்கு ஓடியதே விஜய் தரப்பு தான், வெளியே சதி விதி என்றவர்கள் அங்கு பேச்சே காணோம்
இது முன்னேறிய மாநிலம் இல்லை, மிகவும் பின்தங்கிய மாநிலம்... உன்னோடி கூற்றுப்படி “உ.பி., ம.பி., பீஹார்” ஆகியவைதான் அகில உலக அளவில் முன்னேறிய நெ.1 மாநிலம்...
மக்கள் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் தான் மிகவும் ஆபத்து. அது உங்களுக்கு தெரியாது. உங்க ஆடையில் உள்ள அழுக்கு உங்களுக்கு தெரியாது. அதை எதிர்த்து போராடும் சர்ப்புக்கு தான் தெரியும். அதுபோல நீங்க ஒருதலைப்பட்சமாக ஒரு மதத்தை பற்றியே உயர்வாக பேசுவது எவ்வளவு பெரிய சமுதாய ஆபத்து என்று உங்களுக்கு தெரியாது தமிழ்சமுதாய மக்களுக்காக பாடுபடும் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு தான் தெரியும். தலைவர் சரியாக தான் சொல்கிறார் வரும் தேர்தல் நமக்கு சமுதாய தேர்தல். இதற்கு உங்கள் இந்த விமர்சனமே சாட்சி .
VAAZHTHUKKAL.
இனப்பற்று ஆபத்தானதாகும்.
ஓ ஏதோ சாமான் விற்பது போல மதத்ததை விற்பது நாட்டின் பழைய மரபுகளை அழிப்பது இதெல்லாம் சமுதாய வளர்ச்சியா நான் கூட கவர்னர் தேவையின்றி பேசுகிறார் என்றே நினைத்தேன் இப்போது தெரிகிறது யார் யாருக்காக போராடுகிறார்கள் என்று
200 ரூபாய் வந்துடுச்சா
காலங்காலமாக இதைவைத்து தான் திருட்டு திரவிடியனுங்க உருட்டிக் கொண்டிருக்கானுவ...
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் தமிழகம் போராடும் என்கிற வார்த்தைகள். யாருடன் போர்? போர் என்றவுடன் டிரம்ப் ஞாபகம் வருகிறது. அவருக்கு தமிழகத்தில் போர் என்றால், அவர் அதை உண்மை என நம்பி தடுத்து நிறுத்தவந்துவிடப்போகிறார். பிறகு மீண்டும் அந்த நோபல் பரிசு எனக்குத்தான் என்கிற அலப்பறை.
தமிழக விவசாயிகளுக்கு நெல் பாதுகாக்கும் கொடவுன் கட்ட துப்பு இல்லை இதிலே தமிழ்கத்தை பாதுகாக்க போறானுங்கலாம்
In USA, the state Governors are possessing power and controlling the state Government, which is true Governance.
But in Tamilnadu, after Mr.P.C.Alexander, who governed the state by exercising full powers, did not see any other Governor exercising that much power and control over the state administration.
P C Alexandar was Governor when there was President s rule was there in TN. When Karunanidhi became CM in 1989, he fought with V P Singh and got him replaced by his pet S S Barnalaமேலும்
-
மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிப்பு!
-
அமைச்சர் துரைமுருகன் சொத்துகுவிப்பு வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
-
அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
-
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
-
மேற்குவங்கத்தில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு; கிராமமே புதையுண்ட துயர காட்சிகள்!