நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் பெய்யும் வடகிழக்கு பருவமழையானது, தமிழகத்தின் தென்கோடி பகுதிகளைத் தவிர்த்து பிற இடங்களில் இயல்பை விட சற்று அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அக்டோபர் மாதம் வழக்கத்தை விட கூடுதலாக 15 சதவீதம் மழை பொழியும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகம் முழுதும் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் மழைநீர் தேங்காதவாறு எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். கடந்த காலங்களில் வெள்ளப் பாதிப்பு பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நினைவில் கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
கடந்த வாரம் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், திருச்சி, அரியலூர் ஆகிய டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். நெல் கொள்முதல் மற்றும் சேமிப்புக் கிடங்குகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்.




மேலும்
-
எத்தனை பேர் வந்தாலும்... திருமாவளவன் நம்பிக்கை
-
ஆள்மாறாட்டம் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
-
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்
-
நாட்டரசன்கோட்டை சர்ச்சில் திருட்டு
-
மதுரை வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து மீனாட்சி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதா? * ஆளும் அரசுக்கு ஆபத்து என பட்டர்கள் எச்சரிக்கை
-
ரேஷன் கடை பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்