எவரெஸ்ட் மலையில் பனிப்புயல்; 1000க்கும் மேற்பட்டோர் சிக்கி பரிதவிப்பு
மஹாலங்கூர்: எவரெஸ்ட் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக 1,000க்கும் மேற்பட்டோர் சிக்கிய நிலையில், 350 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
உலகின் மிக உயரமான மலைப்பகுதி எவரெஸ்ட் சிகரம். நேபாளம் மற்றும் சீனா எல்லையில் இந்த சிகரம் அமைந்துள்ளது. இரு நாடுகளில் இருந்தும் இந்த மலைச்சிகரத்துக்கு மலையேற்ற வீரர்கள் செல்கின்றனர்.
சீனாவில் தற்போது கோல்டன் வீக் எனப்படும் 8 நாட்கள் தொடர் விடுமுறையை ஒட்டி, மலையேற்றத்துக்கு இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 1,000க்கும் மேற்பட்டோர் எவரெஸ்ட் மலையேறி, முகாம் அமைத்து தங்கியுள்ளனர்.
அப்போது, இந்த எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கே அமைந்துள்ள சீனாவின் திபெத் பிராந்தியத்தில் கடும் பனிப்புயல் வீசியது. இதில், முகாமில் தங்கியிருந்த 1000க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்களும் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 350க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்
-
மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிப்பு!
-
அமைச்சர் துரைமுருகன் சொத்துகுவிப்பு வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
-
அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
-
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
-
மேற்குவங்கத்தில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு; கிராமமே புதையுண்ட துயர காட்சிகள்!