பெண் குழந்தை பிறந்ததால் சித்ரவதை மனைவி தற்கொலை; கணவர் மீது புகார்

பெங்களூரு: பெண் குழந்தை பிறந்ததால், கணவர் குடும்பத்தினர் சித்ரவதை செய்ததால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு, லக்கரேவின் முனேஸ்வரா பிளாக்கில் வசிப்பவர் ரவீஷ், 28. நான்கு ஆண்டுகளுக்கு முன் இவருக்கும், ஹாசன், அரசிகெரேவை சேர்ந்த ரக்ஷிதா, 24, என்பவருக்கும் திருமணம் நடந்தது.
கர்ப்பமாக இருந்த ரக்ஷிதாவுக்கு, மூன்று ஆண்டுக்கு முன்பு, பெண் குழந்தை பிறந்தது.
ஆண் குழந்தையை எதிர்பார்த்த ரவீஷ் குடும்பத்தினர் வெறுப்படைந்தனர். மருத்துவமனை பில்லை கூட கட்டவில்லை. மூன்று மாதங்கள் வரை, குழந்தையின் முகத்தையும் ரவீஷ் பார்க்கவில்லை.
குழந்தை பிறந்து ஓராண்டு கடந்தும் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை. அதன்பின் உறவினர்கள் அறிவுரை கூறி, ரக்ஷிதாவை கணவர் வீட்டுக்கு அனுப்பினர்.
அன்று முதல் மனைவிக்கு பல விதங்களிலும் ரவீஷ் தொல்லை கொடுத்தார். கடந்த வாரம் குழந்தையின் காதில் சூடு வைத்தார்.
நேற்று காலை ரக்ஷிதாவின் தந்தை திம்மராஜு, மகளுக்கு போன் செய்தார். பல முறை முயற்சித்தும் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், மகளின் வீட்டுக்கு வந்தார்.
கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. வீட்டு உரிமையாளரிடம் மாற்றுச்சாவி வாங்கி, கதவை திறந்து பார்த்தபோது, ரக்ஷிதா துாக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
நந்தினி லே - அவுட் போலீசார் அங்கு வந்து, உடலை மீட்டனர்.
'தங்கள் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கணவர் வீட்டினர் கொலை செய்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்புதான், வீட்டில் இருந்த சொத்து பத்திரங்கள், தங்க நகைகளை வேறு இடத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சதித்திட்டம் தீட்டி மகளை கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர்' என, ரக்ஷிதாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் விசாரணையை துவக்கியுள்ளனர்.
மேலும்
-
ஒடிசாவில் பாஜ பிரமுகர் சுட்டுக்கொலை; பைக்கில் தப்பிய மர்ம நபர்களை தேடும் போலீஸ்
-
அக்டோபர் 12ல் சுற்றுப்பயணம் தொடக்கம்; நிபந்தனைகளுடன் நயினார் பிரசாரத்திற்கு அனுமதி
-
கட்டாக்கில் நீடிக்கும் வன்முறையால் பதற்றம்: இணையதள சேவை முடக்கம் மேலும் நீட்டிப்பு
-
பிரேமலதாவின் தாயார் அம்சவேணி காலமானார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு: ஒரு சவரன் ரூ.89,600!
-
இந்தோனேஷியாவில் பள்ளி கட்டடம் இடிந்த சம்பவத்தால் தொடரும் துயரம்: பலி 61 ஆக உயர்வு