காரை 'ரிவர்ஸ்' எடுத்தபோது 11 மாத ஆண் குழந்தை பலி

காமாட்சிபாளையா :பெங்களூரு காமாட்சி பாளையாவில் 'ரிவர்ஸ்' எடுத்தபோது, கார் மோதியதில் 11 மாத ஆண் குழந்தை பலியானது.
காமாட்சிபாளையாவின் கெம்பே கவுடா நகரை சேர்ந்தவர் சாமி. இவருக்கு ஒரே இடத்தில் நான்கைந்து வீடுகள் உள்ளன. இந்த வீட்டில் வசிப்பவரின் உறவினர், குனிகல்லில் இருந்து தன் குடும்பத்துடன் வந்து தங்கியிருந்தார். இவரின் 11 மாத குழந்தை ஆசான்.
நேற்று காலை வீட்டின் உரிமையாளர் சாமி, தன் காரை ரிவர்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டில் இருந்து வெளியே வந்த குழந்தை மீது கார் ஏறியது.
இதை பார்த்தவர்கள் கூச்சலிட்டதால் பதறிய சாமி, குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, சாமியை காமாட்சிபாளையா போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எத்தனை பேர் வந்தாலும்... திருமாவளவன் நம்பிக்கை
-
ஆள்மாறாட்டம் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
-
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்
-
நாட்டரசன்கோட்டை சர்ச்சில் திருட்டு
-
மதுரை வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து மீனாட்சி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதா? * ஆளும் அரசுக்கு ஆபத்து என பட்டர்கள் எச்சரிக்கை
-
ரேஷன் கடை பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
Advertisement
Advertisement