பஞ்சப்பட்டி பகுதிகளில் நெல் சாகுபடி பணி மும்முரம்


கிருஷ்ணராயபுரம், பஞ்சப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில், விவசாயிகள் கிணற்று நீர் பாசன முறையில் நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி, வீரிய பாளையம், பாப்பகாப்பட்டி, சிவாயம், வயலுார் கிராமங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக விவசாய நிலங்களில் நாற்றங்காலில் நெல் விதைகள் துாவி, பயிர்கள் வளர்ந்து வருகிறது.

மேலும் உழவு செய்யும் வயல்களில் டிராக்டர் கொண்டு உழவு செய்யப்பட்டு நிலம் சமன்படுத்தப்பட்டுள்ளது. இதில், நாற்றங்காலில் வளர்ந்து வரும் நெற் பயிர்களை பறித்து விவசாய கூலி தொழிலாளர்கள் கொண்டு நெற் பயிர்கள் நடவு பணி செய்யப்படுகிறது.
தேவையான நீர் கிணறுகளில் உள்ளதால் விவசாயி கள் ஆர்வத்துடன், நெல் சாகுபடி பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Advertisement