மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கரூர், கரூர் கலெக்டர் அலுவலத்தில் நடந்த, மக்கள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி உள்பட, 319 மனுக்களை பெற்றார்.
பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 3 பயனாளிகளுக்கு, 2.69 லட்சம் மதிப்பீட்டிலான செயற்கை கை, டெய்சி பிளேயர், செயற்கை கால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 11 பேருக்கு, 62,532 ரூபாய் மதிப்பீட்டிலான இலவச தையல் இயந்திரங்கள், சலவை பெட்டி மற்றும் பயிற்சி சான்றுகள் என மொத்தம், 14 பயனாளிகளுக்கு, 3.32 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
டி.ஆர்.ஓ., கண்ணன், சப்-கலெக்டர் பிரகாசம், கலால் உதவி ஆணையர் முருகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
அமைச்சர் சிவராஜ் தங்கடகி, எம்.பி., ராஜசேகர ஹிட்னால்... துரோகிகள்!: காங்., 'மாஜி' அமைச்சர் இக்பால் அன்சாரி ஆவேசம்
-
மொபைல் டவர் நிறுவ போராட்டம் ஜாதிவாரி சர்வே புறக்கணிப்பு
-
முதல்வருக்கு ரூ.70 லட்சத்தில் புதிய மின்சார சொகுசு கார்
-
காரை 'ரிவர்ஸ்' எடுத்தபோது 11 மாத ஆண் குழந்தை பலி
-
காய்ந்த மரங்களை அகற்றுவதில் சிக்கல்
-
பெண் குழந்தை பிறந்ததால் சித்ரவதை மனைவி தற்கொலை; கணவர் மீது புகார்