தம்பதியை தாக்கி நகை, பணம் பறித்த முகமூடி கும்பலால் பீதி
வேலுார் : காட்பாடி அருகே தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த முகமூடி கும்பலால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த ஜாப்ரா பேட்டையை சேர்ந்தவர் முருகேசன்; விவசாயி. இவரது மனைவி சாந்தம்மாள். இவர்கள் நேற்று முன்தினம் வீட்டில் அமர்ந்திருந்தனர்.
அப்போது, நான்கு பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் வீட்டில் நுழைந்து, தம்பதியை தாக்கி, வீட்டில் இருந்த, 85,000 ரூபாய் ரொக்கம், கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி, கம்மலை கொள்ளையடித்து தப்பியது.
முகமூடி கும்பல் தாக்கியதில் காயமடைந்த இருவரையும், அப்பகுதியினர் மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை போலீசார் சேகரித்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர். இது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்
-
எத்தனை பேர் வந்தாலும்... திருமாவளவன் நம்பிக்கை
-
ஆள்மாறாட்டம் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
-
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்
-
நாட்டரசன்கோட்டை சர்ச்சில் திருட்டு
-
மதுரை வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து மீனாட்சி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதா? * ஆளும் அரசுக்கு ஆபத்து என பட்டர்கள் எச்சரிக்கை
-
ரேஷன் கடை பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்