கொழும்பு-சென்னை ஏர் இந்தியா விமானம் மீது மோதிய பறவை: விமான சேவை ரத்து

சென்னை: கொழும்பில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதியது. இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் கொழும்பு செல்லும் பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கொழும்பில் இருந்து 158 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் சென்னை புறப்பட்டது. சென்னை விமான நிலையம் வந்திறங்கிய விமானத்தை எப்போதும் போல் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது விமானம் தரையிறங்கும் போது அதன் மீது பறவை மோதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னையில் இருந்து கொழும்பு சேவையை ஏர் இந்தியா விமானம் ரத்து செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொழும்பு புறப்பட்ட பயணிகளுக்காக வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது;
ஏர் இந்தியா விமானம் சென்னை ஏர்போர்ட்டில் தரையிறங்கிய போது வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது விமானத்தின் மீது பறவை மோதி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விரிவான சோதனைக்காக விமானம் தரையிறக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்; கணித்துச் சொன்னது உலக வங்கி!
-
ஹரியானாவில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
-
தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை அதிகரிப்பு
-
மருத்துவமனையில் இருந்து ராமதாஸ் டிஸ்சார்ஜ்
-
அமெரிக்கர்களின் பசிப்பிணி போக்கும் எல்மண்ட்ஸ் புட் பேங்க்
-
தன் நெஞ்சே தன்னைச் சுடுவதால் விஜய்க்கு வெளியே வர பயம்; துரைமுருகன்